இலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு

380 0

maithiri-chinaஇலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இலங்கை மற்றும் சீனா தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு சமாந்திரமாக சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆரோக்கியமானதும் சாதகமானதுமான வகையில் அமைந்துள்ளது எனவும் இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய சூழ்நிலைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.