நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் சோதனை நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருடன் இணைந்தே குறித்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரோஷன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
5 மாவட்டங்களில் நேற்றும் சோதனை நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை, கொழும்பு, கம்பஹா, குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா பகுதியில் இருந்து 11 பேரும், தும்மலசூரிய பகுதியில் இருந்து 9 பேரும், களுத்துறை பகுதியில் 2 பேரும், மக்கும்பர பகுதியில் இருந்து 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள், இராணுவ சீருடைகளை வைத்திருந்தமை, போதைப் பொருட்களை வைத்திருந்தமை மற்றும் இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரோஷன் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.