இலங்கையின் பிரபல நடிகையான கவீஷா அயேஷானி இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.எனினும் அவரின் உயிரிழப்பில் சந்தேகங்கள் உள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டென்லி திலக்கரட்ன மாவத்தைக்கு எதிரில் ஜூப்ளி கணுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்திருந்தார். இன்று அதிகாலை 2.43 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகை கவீஷா அயேஷானி விபத்திற்குள்ளான சந்தர்ப்பத்தில் அவரது மோட்டார் வாகனத்தில் வேறொரு நபர் இருந்ததாக பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமாரா ஊடாக சாட்சியங்களை பெற்றுக்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, உயிரிழந்த நடிகை தனது காதலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தற்கொலை செய்துள்ளதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.