ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும் – டலஸ்

343 0

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே  முதலில் இடம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர்  டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான   வர்த்தமானி  ஒக்டோபர் மாதம் 20ம் திகதி வெளியிடப்பட வேண்டும்  என்று    தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய    ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிவித்துள்ளமை தொடர்பில்  வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில்  பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும்   எதிர் தரப்பினர் மாத்திரமே கருத்துக்களை வெளிப்படுத்தினோம். தேர்தலை  காலவரையறையின்றி பிற்போடுவதற்கான  காரணிகளை மாத்திரமே காண்பித்ததே தவிர   தேர்தலை விரைவாக  நடத்துவற்கு எவ்வித ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எந்த தேர்தலும் இடம் பெறாது என்ற  நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி உறுதியாக  இருந்தது.  இவர்களின் நோக்கம்  இன்று வெற்றிப் பெற்றுள்ளது.மாகாண  சபை தேர்தல் தொடர்பில்  கடந்த வருடம் பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அறிக்கை தோற்கடிக்கப்பட்டது. இதன் பின்னர் தேர்தலை விரைவு படுத்த  எல்லை நிர்ணய  மீளாய்வு குழு  பிரதமர்  ரணில் விக்ரமசிங்க  தலைமையில் நியமிக்கப்பட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.