அரசாங்கத்துக்குள் பிளவைத் தடுக்க சந்திரிக்கா மத்தியஸ்தம்

357 0

imagesஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி விடுத்த அறிவிப்பையடுத்து அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மத்தியஸ்தம் வகித்துள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோருடன் கடந்த வியாழக்கிழமை இரவு ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளதாக அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.