இலங்கை-மியன்மார் இடையே சந்திப்பு

377 0

flag-pins-myanmar-sri-lankaஇந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மியன்மார் வெளிவிவகார அமைச்சர் அவுன்சான் சுகிக்கும் இடையில் இன்று நண்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமை வரவேற்கத்தக்கதாக காணப்படுவதாக சுகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக சூழலும் வரவேற்கத்தக்கது எனவும் சுகி சுட்டிக்காட்டியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையில் இரு தரப்பு உறவைப் பலப்படுத்தும் வகையில் செயற்படவுள்ளதாகவும் சுகி குறிப்பிட்டுள்ளார். சுகி யிற்கு இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.