அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்-விஜித்த

290 0

இஸ்லாம் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு மாணவர்களை அடக்க நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் அவசரகால சட்டம் அமுலில் இருந்தும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதலை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிடார்.

அரசாங்கம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது. தொடர்ந்தும் அதனை நீடிப்பதன் அவசியம் இருப்பதால் அதற்கு ஆதரவளிக்கின்றோம். ஆனால் அவசரகால சட்டத்தை தொடர்ந்து கொண்டுசெல்வது ஜனநாயகத்துக்கு விரோதமாகும். அது மக்களை கட்டுப்படுத்துவதாக அமையும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.