யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்றின் மீது கும்பலொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
கச்சேரி பகுதியில் வைத்து இன்று மாலை இந்தத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டா வாகனத்தில் வந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் பேரூந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேரூந்தின் மீது யாழ். கச்சேரி பகுதியில் வைத்து அதன் பின்னால் சென்ற பட்டா ரக வாகனத்தில் வந்த கும்பலொன்று வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டது.
இதன்போதுஇ பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில்இ நடத்துநரிடமிருந்த பணப்பையையும் பறித்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.