முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

323 0
முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில் சில நபர்கள் பாடசாலைக்கு வருதல், அதே போன்று சில ஆசிரியர்கள் முகத்தை மூடிய வண்ணம் உடை அணிந்துக் கொண்டு வந்ததன் காரணமாக கடந்த சில தினங்களில் பாடசாலைக்கு வந்ததன் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்த நிலைமை தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்திய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இந்த சம்பவங்களின் பாடசாலை முக்கியஸ்தர்கள் தலையிட வேண்டிய முறை மற்றும் பாடசாலைக்கு பிரவேசிக்கும் பொழுது முகத்தை மூடிய வண்ணமான ஆடை மற்றும் பாதுகாப்பு கவசம் அணிவது தொடர்பில் கட்டளைகள் அடங்கிய விஷேட கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முழுமையாக முகத்ததை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட வதிகளின கீழ் வெளியிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படும் கட்டளைகளுக்கு அமைவாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழு முகத்தை மூடுவது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிருபனத்துடன் கல்வி அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த விஷேட கடிதம் கல்வி அமைச்சின் செயலாளரினால் பாடசாலை முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.