ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் வைத்திருந்த தொடர்பு மற்றும் அவருடைய அமைச்சு பதவியினை பயன்படுத்தி மேற்கொண்ட மோசடிகள் சம்பந்தமான சாட்சிகளை நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் முன்வைப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ரிஷாத் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கான திகதி தொடர்பில் கலந்துரையாடலுக்கு சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கிய போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் ரிஷாத் பதியுதீனை காப்பாற்றுவதாகவே அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.