மலையக மக்களின் வாழ்க்கை முறையை ரீட்டா இசாக் நாடியா பார்வையிட்டார்

358 0

download-2மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை உரிமைகள் பிரச்சனைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இசாக் நாடியா தலைமையிலான குழுவினரிடம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

மலையக தமிழ் மக்கள் பொருளாதாரத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பு தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா இன்று மலையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தெல்தோட்டை லிட்டில்வெலி தோட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அதேவேளை ரீட்டா ஐசாக் நாடியாவை சமயம்¸ சிவில் சமூகம் சார்பாக மனித அபிவிருத்தி ஸ்தாபனம் மற்றும் சமூக ஆய்வாளர்கள் புத்தி ஜீவிகள் சந்தித்து கலந்துரையாடியதுடன் மலையக சிறுபான்மை சமூகம் எதிர் நோக்கும் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளாக முன் வைத்தனர்.

குறிப்பாக புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்ததில் மலையக மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, பிரித்தானியர் அமைத்த ‘லயன்’ வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்ற மலையக மக்களுக்கான தனி வீட்டுத்திட்டம், கல்வி¸ சுகாதார – வைத்திய சேவைகள், தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை, உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவிற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்ததுடன் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

download download download-5 download-1 download-4 download-3