யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் பிரச்சனைகள் ஆராய்வு- அமைச்சர் ஹக்கீமின் பிரதிநிதி யாழ் வருகை

376 0

k800_water03யாழ் மாவட்டத்தில்நிஅலத்தடி நீரில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குடிநீர் நுகர்வோரின் பாவனைக்குறிய நீர் சம்பந்தமான குறைபாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (16) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் விசேட பணிப்புரையின் கீழ்அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நீர் வழங்கல் அமைச்சின் பிரதி தவிசாளருமான சபீக் ரஜாப்தீன் தலைமையில் யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குடிநீர் நுகர்வோரின் பாவனைக்குறிய நீர் சம்பந்தமான குறைபாடுகள் ஆராயப்பட்டன.

k800_water08

இதன் போது யாழ்ப்பாணம் புதிய சோனகதெரு(பொம்மைவெளி) சுன்னாகம் நிலவரை கிணறு ஊர்காவல்துறை புங்குடுதீவு வேலனை
அல்லைப்பிட்டி என பல பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு மக்கள் கருத்துக்களும் இதன் போது அறியப்பட்டது.

k800_water02

இந்த சந்திப்பின் போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம் திட்டப்பணிப்பாளர் பாரதிதாசன் பொருளியலார் ஜெகதீசன் தொழில்நுட்ப அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

k800_water01