தமிழருக்கு தீர்வு இல்லையேல் வெளிநடப்பு-சுமந்திரன்

352 0

sumanthiranதமிழ் மக்களது அபிலாசைகளை எய்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாவது சாத்தியமாகாது என்று அறிந்த மறுநாள் முதல் அரசியல் யாப்புச் சபையில் அங்கம் வகிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே சுமந்திரன் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியச் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுந்திரன், அரசியல் யாப்பு தயாரிப்புப் பணிகள் தொடர்பில் ஒரு சில விடயங்களை இங்கு தெளிவுபடுத்தினார்.

தந்தை செல்வா அரசியலமைப்பு சபையிலே உரையாற்றும்போது, நாங்கள் எவ்வளவு தான் எத்தனித்தோம். ஒவ்வொரு தீர்மானமாக தர்மலிங்கம் 6 தீர்மானங்களை முன்வைத்தார்.

இறுதியாக முன்வைத்த தீர்மானம் சமஸ்டியாக கூட கிடையாது. இறுதியாக கச்சேரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்ற அமைப்புகளாக மாற்றுங்கள் என்பது தான் அந்த பிரேரணை.

அதைக்கூட 86 க்கு 14 என்று நீங்கள் தோற்கடித்துவிட்டீர்களே. இனிமேல் நாங்கள் இதில் பங்குபெறுவதில் அர்த்தமில்லை.

ஆனால் இதை ஒரு பெரிய நாடகமாக நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்று காட்டாமல் இருப்பதற்காக நான் இப்போது வெளிநடப்பு செய்யவில்லை. நாளையிலிருந்து நாங்கள் வரமாட்டோம். என்றும் கூறியுள்ளார்.