மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கட்டுபாட்டுக்குள்!

340 0

மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கட்டுபாட்டுக்குள் கொணடுவந்து தேசிய கல்வி நிறுவனத்தின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைவாக சகல இன மாணவர்களும் கல்வி கற்க கூடிய பாடசாலைகளாக மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 

அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மத்ரசா பாடசாலைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.அதற்கமைய அந்த பாடசாலைகளை கல்வி அமைச்சின் கட்டுபாட்டுககள் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டின்  கீழ் கொண்டுவந்து உகந்த சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும் தேசிய கல்வி நிறுவனத்தின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமையவும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த நான்கு வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள்,தமிழ் மற்றும் சமய பாடசாலைகள் அனைத்தும் சகல இன மக்களுக்கும் பொதுவாக ஆரம்பிக்கப்பட்டவையாகும். இந்த குறுகிய காலப்பகுதியில் சமயமொன்றுக்கு சார்பாக எந்த பாடசாலைகளயும் ஆரம்பிக்கப்பட வில்லை.

எனவே ஏதிர்காலத்தில் எஞ்சியுள்ள பாடசாலைகளையும் சகல சமூகத்தினரும் கல்வி கற்கக்கூடிய பாடசாலைகளாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பதோடு  இதனூடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.