ரணி­லுக்கு எதி­ரான மனு விசா­ர­ணை­யின்றி தள்­ளு­படி

298 0

ணில் விக்­ர­ம­சிங்­கவின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் வகையில் தாக்கல் செய்­யப்­பட்ட கோ வொறன்டோ நீதிப் பேராணை மனுவை விசா­ர­ணைக்கு எடுக்­காது மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் நேற்று தள்­ளு­படி செய்­தது.

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­க­ளான ஷிரான் குண­ரத்ன மற்றும் பிரி­யந்த பெர்­னாண்டோ ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் குழு இதற்­கான தீர்ப்பை நேற்று வழங்­கி­யது.

அரச நிறு­வ­னங்­க­ளுக்கு சேவை­களை வழங்கி, பணம் ஈட்டும் வரை­ய­றுக்­கப்­பட்ட லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் அன்ட் பப்­ளிஷர்ஸ் தனியார் நிறு­வ­னத்தின் முக்­கிய பங்­கு­தா­ர­ராக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க செயற்­ப­டு­வதால், அவரால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பத­வி­வ­கிக்க முடி­யாது என தெரி­வித்து, நீதிக்­கான பெண்கள் அமைப்பின் இணைத் தலை­வரும் கொழும்பு மாந­க­ர­சபை உறுப்­பி­ன­ரு­மான ஷர்­மிளா கோன­வல இந்த மனுவை பிர­தமர் ரணி­லுக்கு எதி­ராக தாக்கல் செய்­தி­ருந்தார். முதலில் இந்த மனு அப்­போ­தைய மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான தீபாலி விஜே­சுந்­தர மற்றும் அர்­ஜுன ஒபே­சே­கர ஆகியோர் முன்­னி­லையில், ஆரா­யப்­பட்­டது. இதன்­போதே தனிப்­பட்ட கார­ணங்­களால் இம்­ம­னுவை  தன்னால் விசா­ரிக்க முடி­யாது என அப்­போ­தைய  பதில் தலைமை நீதி­பதி தீபாலி விஜே­சுந்­தர, தான் அங்கம் வகிக்­காத வேறொரு நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் இந்த மனுவை பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்ள உத்­த­ர­விட்டார்.

அதன்­ப­டியே  அம்­மனு நீதி­ப­தி­க­ளான ஷிரான் குண­ரத்ன, பிரி­யந்த பெர்­னாண்டோ ஆகியோர் முன்­னி­லையில் ஆராயப்­பட்டு வந்­தது.

கடந்த தவ­ணையின் போது இம்­மனு தொடர்பில் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பான பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க சார்பில் ஜனாதி­பதி சட்­டத்­த­ரணி கே.கனகஈஸ்­வ­ரனும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­னாண்­டோவும் ஆஜ­ராகி வாதங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர்.

இதன்­போது மனு­தாரர், குறித்த மனு தொடர்பில் சாட்­சி­யங்­க­ளாக முன்­வைத்­துள்ள ஆவ­ணங்கள் மூலப் பிர­தி­க­ளல்ல என்­பதை சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனகஈஸ்­வரன், அவ்­வா­றான சாட்­சி­யங்­களை மைய­ப்ப­டுத்­திய மனுவை மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு விசா­ரிக்க முடியாது என வாதிட்டார். அதனால் மனுவை விசாரணைக்கு எடுக்காது தள் ளுபடி செய்யவேண்டும் எனவும் அவர் கோரினார். அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டே நேற்று மேன் முறையீட்டு மன் றம், குறித்த மனுவை விசாரணைக்கு ஏற் காது தள்ளுபடி செய்தது.