அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக விசாரணை நடத்த குழு நியமனம்

303 0

45ad714773b44d1381a0e88e741132c5_xlஅரசியல்வாதிகள், உயர் அரச அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று நிறுவப்பட உள்ளது. குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி தீர்மானங்களை எடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நிறுவுமாறு பணித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் இந்த குழுவினை நிறுவுவதற்கான அமைச்சரவை பத்திரமொன்றையும் பாராளுமன்றில் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் அரசியல் பிரபு அல்லது அரச உயர் அதிகாரி ஒருவருக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் இந்த பாரளுமன்ற குழுவிற்கு அறிவிக்க வேண்டும் எனவும் இந்த குழுவின் பரிந்துரைக்கு அமையவே இனி வரும் காலங்களில் அரசியல் பிரபுக்கள் மற்றும் அதிகாரிகளை கைது செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.