அரபு மொழிப் பதாதைகள் அனைத்தும் உடன் அகற்றப்படவேண்டும்!-பிரபா கணேசன்

287 0

வன்னி மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கிகள் அல்லது சில உதவிகள் வழங்கிய இடங்களில் தனி அரபு மொழியில் பதாதைகளில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது கவலையளிக்கின்றது.

இன்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  பிரபா கணேசன் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாடு சிங்கள தமிழ் மொழி நாடு இரண்டு மொழிக்கான நாடாக இருந்து கொண்டு வேறு  புரியாத மொழியான இங்குள்ள முஸ்லிம் மக்களுக்குக்கூடப் புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை வேறு மொழியான அரபு மொழியிலேயே பல இடங்களில் பதாதைகள் பொறிக்கப்பட்டுள்ளதை எங்களால் காணக்கூடியதாக உள்ளது. இன்று அல்லாகு அக்பர் என்று சொல்லிக்கொண்டு மனித படுகொலைகள் செய்கின்றார்கள்.

கடந்த காலங்களில் கோழிகளை, ஆடுகளை, மாடுகளை வெட்டுவதற்கும் தான் அல்லாகு அக்பர் என்று சொல்வார்கள் இன்று மனிதர்களைப் படுகொலை செய்வதற்கு அந்தப் பெயர்களைப் பாவித்திருப்பதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. இஸ்லாமியர்கள் தமிழ் முஸ்லிம்கள். காலம் மாறிய போது அதிகளவான முஸ்லிம்கள் அரபுமொழி ஆதிக்கத்தைச் செலுத்தி எமது நாட்டிற்குள் அரேபியக் கலாச்சாரம் எமது நாட்டிற்குள் வந்ததினால் தான் இன்று முஸ்லிம்கள் பிறிதொரு பிரிவினர் என்ற மமதையை உருவாக்கி வைத்துள்ளது.

ஆகவே இந்த அரேபியக் கலாச்சாரம் முற்றாக நிறுத்தப்படவேண்டும் வன்னி மாவட்டத்திலுள்ள அரபு மொழிகளில் எழுதியுள்ள அனைத்து வாசகங்களும் முற்று முழுதாக அழிக்கப்படவேண்டும் இது சம்பந்தமாக நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனிடமும் நாங்கள் தெரிவிக்க இருக்கின்றோம்.

எமக்குப் புரியாத எமக்குச் சம்பந்தமில்லாத அரபு மொழியிலுள்ள வாசகங்கள் நிச்சயமாக அகற்றப்படவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.