மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் பதிலளிக்க மறுத்த காவல்துறை மா அதிபர்

286 0

poojithaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் காவல்துறை மா அதிபரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புத் தரப்பினர் நீதிமன்றில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்துவது குறித்து அண்மையில் ஜனாதிபதி வெளியிட்டிருந்த கருத்து  தொடர்பில் காவல்துறை மா அதிபரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த போதும் அவர் இந்தக் கேள்விகளுக்கு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டள்ளது .

இதேவேளை, லசந்த கொலையை தாமே மேற்கொண்டதாகக் கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நபரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கேகாலை காவல்தறையினர் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லசந்தவை கொலை செய்துள்ளதாக அவர் எழுதிய கடிதம் தொடர்பில் தற்போதைக்கு இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள அவர் தொழில் ரீதியான பிரச்சினையா அல்லது தனிப்பட்ட பிரச்சினையா அல்லது வேறும் பிரச்சினையா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.