தான் பதவி விலகப் போவதில்லை என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணைப் பிரிவின் ஆணையாளர் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் ஆகியோருடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தில்ருக்ஸி விக்ரமசிங்க பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழு தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்ட போது தில்ருக்ஸி நாட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.