இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடாகும். இது சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது. ஆனால் இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல என்று கூறுகின்ற அமைச்சர் ஒருவரின் கருத்து கவலையளிக்கிறது என பிரபல பயங்கரவாத எதிர்ப்பு விவகார நிபுணரான ரொஹான் குணரத்ன தெரிவித்திருக்கின்றார்.
அத்தோடு நாடொன்றின் தேசிய பாதுகாப்பென்பது நிரந்தரமாக மேம்பாடடைய வேண்டியதொன்றாகும். அதேபோன்று ஏதேனும் புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெறின் அதற்கமைய உடனடியாக செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படாமலிருப்பதும் பாரிய குற்றமாகும்.
உண்மையில் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் புலனாய்வுப் பிரிவின் குறைபாட்டினால் ஏற்பட்டதல்ல. மாறாக புலனாய்வுத் தகவல்களின்படி செயற்படத் தவறியமையால் ஏற்பட்ட அனர்த்தமாகும். அரசியல்வாதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் விளையாடுகின்றார்கள் என்று பேராசிரியர் ரொஹான் குணரத்ன மேலும் தெரிவித்திருக்கின்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நாடொன்றின் தேசிய பாதுகாப்பென்பது நிரந்தரமாக மேம்பாடடைய வேண்டியதொன்றாகும். அதேபோன்று ஏதேனும் புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெறின் அதற்கமைய உடனடியாக செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படாமலிருப்பதும் பாரிய குற்றமாகும்.
உண்மையில் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் புலனாய்வுப் பிரிவின் குறைபாட்டினால் ஏற்பட்டதல்ல. மாறாக புலனாய்வுத் தகவல்களின்படி செயற்படத் தவறியமையால் ஏற்பட்ட அனர்த்தமாகும். அரசியல்வாதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் விளையாடுகின்றார்கள்.
அதேபோன்று இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடாகும். இது சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது. ஆனால் இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல என்று கூறுகின்ற அமைச்சர் ஒருவரின் கருத்து கவலையளிக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் அவரின் கருத்தினால் பௌத்தர்கள் மேலும் கோபமடையக்கூடும். அரசியலமைப்பில் எவ்வாறெனினும், எதுவாயினும் கூறப்பட்டிருக்கலாம். ஆனால் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.