இனப்படுகொலையின் 10வது ஆண்டு நினைவு நாள் இத்தாலி மேற்பிராந்தியம்

467 0

இத்தாலி மேற்பிராந்தியம் ‘ஜெனோவா’ மாநகரின் மையப்பகுதியில் இதமிழ் இன அழிப்பு நாளான மே 18.05.2019 அன்று சனிக்கிழமைஇஎமது தமிழ் இன உரிமைகள் மறுக்கப்பட்டு எமது விடுதலைக் குரல் மௌனிக்கப்பட்ட நெஞ்சு கனத்த நாளை வேதனையுடன் கூடிய பெரும் எழுச்சியுடன் பெருந்திரளான மக்களின் பலத்த ஆதரவுடன் நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்விற்கு இத்தாலி மேற்பிராந்தியத்தில் ஈழத்தமிழர்கள் அதிகமாய் வாழும் பல பிராந்தியங்களிலிருந்தும் பேரூந்துகள் மூலம் ‘ஜெனோவா’நகரில் சரியான நாழிகைக்கு மக்கள் பெருந்தொகையில் உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்தனர்.அது மட்டுமன்றி ஒவ்வொரு பிராந்தியங்களிலிருந்தும் பல வடிவங்களில் எமது விடுதலைப்போராட்டமும் இகட்டமைப்பு சார் தமிழ் இன அழிப்பு எப்படி’சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் திட்டமிடப்பட்டு இடம்பெறுகின்றது தொடர்பாகவும் 40 இற்கும் மேற்பட்ட எமது மாணவ செல்வங்களால் உணர்வு பொங்க,நடனம்,இயல் இசை,தெருவோர உரை நிகழ்வு, போன்ற வடிவங்களில் தமிழிலும்,இத்தாலிய மொழியிலும் இடம்பெற்றதானது ‘தமிழ் இன அழிப்பு நாளை’நினைவு கூருவதோடு நின்று விடாமல் அந்நாளினை விடுதலை தாகம் தணியாமல் எழுச்சிகொண்டெழும்பிய நாளாகவே இட்டுச்சென்றது.

நடன வடிவங்கள் இரத்தம் தோய்ந்த’முள்ளிவாய்கால்’ இனப்படுகொலையின் 10வது ஆண்டு நினைவு நாள்தொடர்பாகவும்இஇயல் இசை வடிவமானது இறுதி யுத்தத்தின் போது எமது மக்கள் பட்ட இடப்பெயர்வு,இழப்புகள் பற்றியும்,அத்தோடு எமது விடுதலை வீரர்களின் உறுதி,வீரம் தொடர்பாகவும்,இறுதியாக எமது பாலகன் பாலச்சந்திரனின் படுகொலை எப்படி இடம்பெற்றதெனவும் தெருவோர உரை நிகழ்வானது அந்நியர் வருகையும் ‘1948 தொடக்கம் 2019 உயிர்த்த ஞாயிறு’வரை’சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் எப்படி கட்டமைப்பு சார் தமிழ் இன அழிப்பு திட்டமிடப்பட்டு இடம்பெறுகின்றதென்பதையும் இதனை சர்வதேசம் பாராமுகமாய் இருப்பதையும் வரலாற்று ரீதியாக வெளிக்காட்டப்பட்டது.

இதற்கூடாக எமது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தையும்இசிங்கள அரசினால் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றோம் என்பதையும்,இதற்கு ஐ.நா.சபை தொடக்கம் பலம் பெற்ற வல்லரசுகள்,ஏனைய நாடுகள் நீதிக்கு குரல் கொடுக்காமல் அமைதி காப்பது ஏன் என்றும்,எமக்கான மனித உரிமையை பெற்றுத்தரும்படியும்,இனவழிப்பிலிருந்து எம்மைக்காத்து எமக்கான சுயநிர்ணயஉரிமையை எமக்கு தரும்படியும்,பக்கச்சார்பற்ற அனைத்துலக போர்க்குற்ற நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் வானுயர முழக்கமிடப்பட்டது.

இந்நிகழ்வின் மூலம் பத்திரிகையாளர்களும், இத்தாலிய மக்களுக்கும்,இத்தாலிய மற்றும் வேற்றின பல்கலைக்கழக மாணவர்களுக்கும், உல்லாசப்பிரயாணிகளுக்கும் எமது நியாயத்தன்மை புரியவைக்கப்பட்டது.பல ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.அவர்களின் கவனத்தை இந்நிகழ்வு ஈர்த்துக்கொண்டதுடன் எமது வரலாற்று பின்னணியையும் கவனமாகவும்,ஆர்வத்துடனும் கேட்டு எம்முடன் ஒன்றிணைந்து கொண்டனர்.பத்திரிகையாளர்கள் குறிப்பாக இனவழிப்பு இகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இவ்விரு கேள்விகளுக்கு அதிக விளக்கம் கேட்டனர்.அத்தோடு உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாகவும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.

எனவே !எம்மை 2009 மே 18 ற்கு பின் முற்றிலுமாக கடந்த பத்தாண்டுகளாக ஒடுக்க நினைத்த சிங்கள தேசத்தின் திட்டமிட்ட சதியினை முறியடித்து, தாயகத்தில் ‘முள்ளிவாய்க்கால்’உட்பட பல இடங்களிலும்,உலகின் பல நாடுகளிலும்,வெற்றிகரமாக உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட இந்நாளானது ‘சிங்கள இனவாதத்திற்கும்’ஐ.நா.சபைக்கும்,உலகிற்கும் தெளிவான ஓர் செய்தியை சொல்லியுள்ளது.அது என்னவெனில் ‘சிங்களவருடன் தமிழர்கள் நல்லிணக்கத்துடன் வாழ முடியாது’என உறுதி செய்துள்ளதுடன் தமது சுய நிர்ணய உரிமையை கோரிநிற்கின்றனர் எனவும். ஈழத்தமிழர்கள் அது கிடைக்கும் வரை சந்ததி சந்ததியாக போராடுவார்கள் என்பதேயாகும்.