2018ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1932 தசம் 5 பில்லியன் ரூபாவாகும். 2017ஆம் ஆண்டில் இந்தத் தொகை ஆயிரத்து 839 தசம் 6 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்திற்குக் கிடைத்த வருமானத்திற்கான பிரதான மூலங்களாக வரி வருமானம், வரி தவிர்ந்த வருமானம், அரசாங்கத்திற்குக் கிடைத்த திரும்பச் செலுத்தாத நிதி என இங்கு குறிப்பிடலாம்.