“நாளை முதல் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சர் வலியுறுத்தல்”

363 0

நாளை முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

கொழும்பில் அமைந்துள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூரு விளைவிக்க இடமளிக்க முடியாது. பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை வீதம் குறைவடையும் பட்சத்தில் இடம்பெறவுள்ள தவணை பரீட்சைகள் உள்ளிட்ட க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள்,ஏனைய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆகவே நாளை முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் எக் காரணம் கொண்டும் இரண்டாம் தவணை பரீட்சை உள்ளிட்ட ஏனைய பரீட்சைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும் பரீட்சைகள் உட்பட மாணவர்களின் விடுமுறைகள், ஏனைய கல்வி நட்வடிக்கைகள் தொடர்பில் நாளை கூடவுள்ள கல்வி அமைச்சின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.