ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விருந்தோம்பல் மற்றும் ‘லைப் ஸ்டைல்’ விழாவில் இந்தியாவின் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 7 நட்சத்திர விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகின் அதிநவீன சொகுசு ரெயிலாக கருதப்படும் ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’ ரெயிலை இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை இயக்கி வருகிறது.
4 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 43 விருந்தினர் அறைகள் உள்ளன. இதில் 20 டீலக்ஸ், 18 ஜூனியர் சூட்கள், 4 சூட்கள் மற்றும் ஒரு பிரசிடென்சியல் சூட் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த ரெயிலில் எட்டு நாட்கள் திருமண சுற்றுலா நடத்த ஐந்தரை கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருமணம் தவிர பாலிவுட் சினிமா சூட்டிங், பேஷன் நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மகாராஜா ரெயிலில் நடத்திக்கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் உள்ள மார்பெல்லா நகரில் நேற்று நடந்த விருந்தோம்பல் மற்றும் ‘லைப் ஸ்டைல்’ விழாவில் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இந்த (2016) ஆண்டுக்கான 7 நட்சத்திர விருந்தோம்பல் விருது வழங்கப்பட்டுள்ளது.