அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை குறைந்தது 10 ஆக வரையறுக்க முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஆதாரபூர்வமாக பகிரங்கப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.
பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.
அத்தடன் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான விவாதத்தை இரண்டு நாட்களுக்கு எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.