அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் முழுமையாக ஆராய்ந்ததன் பின்னரே எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவினர் இடைக்கால அரசாங்கத்தை அமைத்து ஆட்சியைபெற வேண்டிய அவசியம் கிடையாது. தேர்தலை விரைவாக நடத்தினால் மக்களே தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துக் கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் தகுதி மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடையாது. இவர்கள் தங்களின் சுய இலாபத்தை மதிப்பிட்டே ஒரு தரப்பினருக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்கட்டினார்.