அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகளவு பிரயோகிக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த பின்னர் பயங்கரவாதம் தோன்றியமைக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை சர்வதேசத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலேயே இந்த அரசாங்கம் தெரடர்ச்சியாக செயற்பட்டு வருவதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டினார்.
இதனால்தான், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து, இலங்கை முப்படையினருக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.