காவிரி நீர் பிரச்சினை விவசாயிகளின் போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு – வைகோ

320 0

vaikoகாவிரி நீர் பிரச்சினைக்காக நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும் என வைகோ கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

இந்த போராட்டத்தில் ம.தி.மு.க. மட்டுமல்லாமல் மக்கள் நலக்கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் கலந்து கொள்கிறது.

இதேபோல பொது மக்களும் இப்போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து மத்திய அரசை நிலை குலைய செய்ய வேண்டும்.

நர்மதா நிதி நீர் பிரச்சினையில் சுலபமாக முடிவெடுத்த மத்திய அரசு காவிரி பிரச்சினையில் மக்களவையில் அனுமதி பெற வேண்டும் என கூறி தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் செய்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும் என அவர் கூறினார்.