இந்தியா மீது எனக்கு உயர்ந்த நம்பிக்கையும் உண்டு – டொனால்ட் டிரம்ப்

309 0

201610161007460349_india-us-would-be-best-friends-if-elected-as-president_secvpfஅதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ளநிலையில் தற்போது இந்தியா மீதும், இந்துக்கள் மீதும் டொனால்ட் டிரம்ப் திடீரென பாசமழை பொழிய தொடங்கியுள்ளார்.

நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள எடிசன் நகரில் அமெரிக்காவில் வாழும் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய மக்கள் ஏற்பாடு செய்திருந்த பிரசார கூட்டத்தில் கருத்துரைத்த  டொனாட் டிரம்ப்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவின் இயற்கையான நட்பு நாடாகும்.

எனது அரசு நிர்வாகத்தின்கீழ் நாங்கள் மிகச்சிறந்த நண்பர்களாக இருப்போம். திறந்த வர்த்தகத் தொடர்புகளின் மூலம் இந்தியாவுடன் ஏராளமான வர்த்தகத்தை நடத்தி, இருநாடுகளுக்கும் அபரிமிதமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

கடந்த 19 மாதங்களுக்கு முன்னர் நான் இந்தியாவுக்கு சென்றேன். அடுத்தடுத்து அங்கு செல்ல விரும்புகிறேன். இந்தியாவில் எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். இந்தியா மீது எனக்கு உயர்ந்த நம்பிக்கையும் உண்டு என குறிப்பிட்டார்.