சென்னை விமானத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

293 0

201610161215348188_1-kg-smuggling-gold-seized-in-chenai-airport-youth-arrest_secvpfஅபுதாபியில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபுதாபியில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிள் சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபரின் சூட்கேசில் 1 கிலோ தங்க பிஸ்கட் இருப்பது தெரிந்தது.

அவர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தங்கம் கடத்தலுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் உதவியதும் தெரிய வந்தது.

இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் தங்கம் கடத்தலில் உள்ள பின்னணி குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.