கொடிய அரச பயங்கரவாதத்தை மேற்கொண்ட படையினரை தாயக மண்ணில் நிறுத்துவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கில் இராணுவத்தினரை நிறுத்துமாறு தான் கூறியதாக தென்னிந்திய ஊடகமொன்றில் செய்தி வெளியிடப்பட்டதாகவும் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட தான், ஒருபோதும் கொடிய அரச பயங்கரவாதத்தை நிறுவிய படையினரை வடக்கு கிழக்கில் நிறுத்துமாறு கூறவில்லை என்பதோடு, அவர்கள் அவ்வாறு நிலைகொள்வதை தான் ஒருபோதும் விரும்பவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.