ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார். – பைசல் காசிம்

327 0

risadஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டதாக பைசல் காசிம் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்த கருத்துக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிசெல்லவுள்ளதாக அந்த கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை பைசல் காசிம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சுமத்தியிருப்பது நாங்களும் ஒரு கட்சி என்ற அடிப்படையில் அதன் உண்மை நிலையை அறிய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது
அதனால் நாங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிடத்தில் இந்த முறைப்பாட்டைச் செய்து உண்மையிலேயே எங்களுடைய கட்சியின் தலைவர் இலஞ்சம் கொடுத்துத்தான் இந்த அமைச்சைப் பெற்றாரா என்கிற விடயத்தை அறிய வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.