தூக்கில் தொங்கி நபர் ஒருவர் பலி

420 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் இரண்டாம் ஒழுங்கை புதிய கொலனி பகுதியில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய மங்ககநாதன் மகேஸ்வரன் என்கின்ற நபருடைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் நேற்றைய தினம் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் குறித்த நபர் இருந்ததாகவும் இன்று அதிகாலை அவருடைய மகன் வீட்டில் சென்றபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப் பட்டிருக்கின்றாரா அல்லது தானாக தூக்கில் தொங்கி இருக்கிறார என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அவருடைய உடலில் ரத்தம் வெளியேறி இருப்பதை அவதானிக்க கூடிய நிலையில் இது கொலையா தற்கொலையா என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் எழுந்து இருக்கின்றது.

சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்