மோடியை சந்தித்தார் மைத்திரி

331 0

30495-300x225இந்தியா கோவாவில் இடம்பெறும் பிரிக்ஸ் மாநாட்டில் வைத்து இன்று காலை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது, தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

8வது தடவையாக நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாட்டிற்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்கின்றது.

இந்த மாநாட்டில் பிரிக்ஸின் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.