போயா தினமான நேற்று சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் புதன் கிழமை 22ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஉத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளிகளான கவரவில பி பிரிவில் உள்ள சந்தேக நபரிடம் 14 மதுபான போத்தல்களும் கவரவில ஜனபதய பகுதியில் 3 மதுபான போத்தல்களும் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் 22 சிறிய மது போத்தல்களையும் கைப்பற்றியதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.