பல்வேறு குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய நிலையில் கம்பளையில் வைத்து கைது செய்யப்டுள்ளார்.
மேற்படி சந்தேக நபர் பெல்மதுளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைப் பயமுறுத்தி மாகந்துரே மதூஷ் என்பவரைப் பிணையில் எடுக்க தனக்குப் பணம் தேவை என்றும் 50 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளார்.
பின்னர் 5 இலட்சம் தருவதாகவும் அதில் ஒரு தொகையைத் தனிப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில் வைப்பில் இடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் கஹவத்தை பொலிசில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த பெலிஸார் கம்பளை பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணத்தை மீளப் பெறும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம் பெறுகின்றன.