கட்டுநாயக்க விமானப் படை முகாமில்; கடமையாற்றும், 22 வயதான விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது நெஞ்சுப் பகுதிக்கு துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட அவர், படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிப்பாய் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ரனுத் ஹன்சிக விஜேரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த சீதுவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.