தூதுவர்கள் நியமிக்க புதிய முறை

274 0

downloadபுதிய முறையில் சில நாடுகளுக்கு தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 22 நாடுகளுக்கு வதிவிடமற்ற 14 தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

எதிர்வரும் சில வாரங்களில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இடையில் நடைபெறும் விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தப் பதவிக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதேவேளை, நாட்டின் பிரபல்யமான வர்த்தகர்கள் தொழில்சார் நிபுணர்கள் இந்தப் பதவிகளில் அமர்த்தப்பட உள்ளனர்.

எனினும் இவர்களுக்கு வேதனம் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது.