ஜிகாதி பயங்கரவாத்தை ஒழிக்க இலங்கையுடன் கைக்கோர்க்கும் அமெரிக்கா – இந்தியா !

401 0

அமெரிக்க- இலங்கை  இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயமாக கருத கூடிய வகையிலான கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. 

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு பேச்சு வார்த்தைகளில் கலந்துக்கொண்டிருந்தது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான  முக்கிய தரப்பினர் அமெரிக்கா சார்பில் கலந்துக்கொண்டிருந்தனர்.

 

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் அவரமாக நடைப்பெற்ற  இந்தப் கலந்துரையாடலில் , பிரதானமாக தீவிரவாத முறியடிப்பு, பாதுகாப்பு, மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட நாடுகடந்த குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்தோ-பசுபிக் மூலோபாயம் இலங்கை  மற்றும் ஆசியப் பிராந்தியம், இராணுவ- இராணுவ உறவுகள் மற்றும்வருகை படைகள் உடன்பாடு மற்றும் இலங்கையின்

அமைதிகாப்புக்கான உதவி கண்ணிவெடிகளை அகற்றும் ஆற்றல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதே வேளை அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் பின்னர்   வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு மெக்சிக்கோவில் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டை சந்தித்து கலந்துரையாடியது.

அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாதி பயங்கரவாதத்தை  ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கைக்கு அனைத்து வகையான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது