இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் 12,000 இற்கும் அதிகமான வீரர்கள் சரணடைந்துள்ளனர்.
இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் ஏப்ரல் 22ம் திகதி அறிவிக்கப்பட்டது.
குறித்த பொதுமன்னிப்பு காலம் மே மாதம் 10 ஆம் திகதி வரை வழங்கப்பட்டு பின்னர் அது நேற்றைய தினம் வரை நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த காலத்தில் 12,312 இராணுவ வீரர்கள் இராணுவத்தில் சரணடைந்துள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.