அரசாங்கத்திற்கு புதிதாக நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி நெருக்கடி கொடுக்க வேண்டியதில்லை, அரசாங்கம் ஏற்கனவே நெருக்கடியிலேயே உள்ளது.
பாரிய நிதி மோசடிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இன்று அமைச்சர்களாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றார்கள்.
அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கவோ அழுத்தங்களை பிரயோகிக்கவோ இல்லை.
மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு நேரடியாகவே உதவிகளை வழங்க தமது தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.