பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ம் திகதி திறக்கப்பட உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உபுல் திசாநாயக்க கூறினார்.