முள்ளிவாய்க்கால் தமிழர் அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) மட்டக்களப்பு வாகரை மாணிக்க கடற்கரையிலும் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் நலன் காப்பகம் என்ற அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக நினைவு வணக்கம் செலுத்தினர்