ஜேர்மனியில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஊர்வலம்(படங்கள்)

878 0

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தின நிகழ்வுகள் தற்போது, ஜேர்மனியில் இடம்பெற்று வருகின்றன.

தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்புதின நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

ஜேர்மனியிலுள்ள டுசில்டொர்ஃப் என்னும் இடத்தில் அமைந்துள்ள பாராளுமன்றத்தினை நோக்கி நிகழ்வில் பங்கேற்றுள்ள மக்கள் தற்போது பேரணியாகச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

 

இதன்போது, சர்வதேசமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு முன்பாக, தமிழின அழிப்பின்போது, முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வினையும் நடாத்தவுள்ளனர்.