முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் க.பிருந்தாபன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா பிரதான சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.