இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 85வது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் யாழ் பொது நூலகத்தின் இந்திய பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது யாழ் பொது நூலகத்தின் இந்திய பகுதியில் உள்ள டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவச்சிலைக்கு இந்திய துணை தூதுவரினால் மாலை அணுவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அப்துல்கலாம் தொடர்பில் பாடசாலை மாணவரடகளினால் விசேட பேச்சுகள் இடம்பெற்றதுடன் கலைகலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அத்துடன் பேச்சு மற்றும் கலாசார நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாணவர்கள் இந்திய தூதுவரினால் கௌரவிக்கப்பட்டனர்.