இராவணனை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக, இலங்கையின் ராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன், இப்போது பயங்கரவாதம் என்ற புதிய வடிவில் வந்திருக்கிறான் என்று கூறியிருந்தார்.
இந்தியப் பிரதமரின் இந்தக் கருத்துக்கு சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராவண பலய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ராவண பலயவின் தலைவர், சத்ததிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார்.