தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவ்வாறு ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடுவோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக முழுமையான அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புகள், எதிர்க்கட்சி மற்றும் பொது மக்களினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
அதற்கமைய முன்னாள் சிரேஷ்ட நீதிபதிகள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும், முன்னாள் கணக்காய்வாளர்கள் குழுவில் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.