நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை

357 0

84619a5a4b4411140cfa259758da367cநுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் மின்நிலையத்தில் இந்த கோளாறு ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

கோளாறை சீர்செய்து மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.