இரண்டாம் தர மாணவர்களுக்கு பாலியல் கல்வி

357 0

school-children-2அடுத்த ஆண்டு முதல் பாலியல் கல்வியை பாடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டு, தரம் இரண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இதனை உள்ளடக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் நடாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இந்த பாடத்தினை கற்பிப்பது தொடர்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் ஒரு முயற்சியாக, உடற்கூறு மற்றும் வாழ்க்கை குறித்த அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.